என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண் குவிப்பு- என்ஜினீயரிங் கட்-ஆப் உயருகிறது
    X

    கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண் குவிப்பு- என்ஜினீயரிங் கட்-ஆப் உயருகிறது

    • பி.காம் கட்-ஆப் குறைய வாய்ப்பு.
    • நர்சிங், வேளாண்மை, கால்நடை, மீன்வள படிப்புகளுக்கு போட்டி அதிகரிக்கும்.

    பிளஸ்-2 தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் வணிகவியல் பாடப்பிரிவு மதிப்பெண்களை விட அறிவியல் பாடங்களில் அதிகளவில் மதிப்பெண் பெற்று உள்ளனர்.

    கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

    வணிகவியல் பாடத்தில் கடந்த வருடம் 6,142 பேர் சென்டம் பெற்று இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,624 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இந்த ஏற்றுத் தாழ்வுதான் பி.காம் கட்-ஆப் குறைவுக்கான வாய்பை உருவாக்கி உள்ளது.

    பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட்-ஆப் அதிகரிக்கும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதன் கட்-ஆப் கூடும் என்றும் இதனால் டாப் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு கடுமையான போட்டி இருக்கும் என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

    அண்ணா பல்கலைக் கழக வளாகக் கல்லூரிகள், பி.எஸ்.சி. தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு கடுமை யான போட்டி ஏற்படக் கூடும். 5 முதல் 10 கட்-ஆப் மதிப்பெண் வரை உயர்வ தற்கு வாய்ப்புள்ளது.

    டாப் கல்லூரிகளில் கடந்த வருடம் பி.காம் படிப்பில் சேருவதற்கு 100 சதவீத கட்-ஆப் மார்க் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது ஒன்று அல்லது 2 மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் தெரிவித்தார்.

    என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் உயரும் நிலையில் வேளாண்மை, கால் நடை, மீன்வளம், வனத்துறை படிப்புகளுக்கான கட்-ஆப் ஒன்று அல்லது 3 மதிப்பெண் கூடும் என்று கருதப்படுகிறது.

    கடந்த சில வருடங்களாக பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் இந்த ஆண்டு சற்று குறையக்கூடும். அதே நேரத்தில் என்ஜினீயரிங் படிப்புக ளுக்கு மவுசு அதிகரித்து உள்ளது.

    கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு இருப்பதால் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கலை அறிவியல் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் உயர்கல்வியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    Next Story
    ×