வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை:

இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுக்குள்(வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதன்படி, நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்துக்குள் பனி முற்றிலுமாக விலகிவிடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com