என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீனவர்கள் வலையில் சிக்கிய மருத்துவ குணம் கொண்ட 2 மீன்கள்- ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை
- ஒரு மீன் 22 கிலோ, மற்றொரு மீன் 24 கிலோ எடையுடன் இருந்தன.
- கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவது கிடையாது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 600-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, பாறை, விளை உள்ளிட்ட பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 2 பெரிய கூறல் மீன்கள் சிக்கி இருந்தன. இதில் ஒரு மீன் 22 கிலோ, மற்றொரு மீன் 24 கிலோ எடையுடன் இருந்தன.
இந்த 2 மீன்களும் கிலோ ரூ.3,600 வீதம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கு விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மீனவர்கள் கூறும் போது, "கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவது கிடையாது. இந்த மீனின் வயிற்றுப்பகுதியில் உள்ள ஒருவித பாகமானது மருத்துவ குணம் கொண்டது. விலை உயர்ந்த சூப் தயாரிக்கவும் பயன்படுகிறது" என தெரிவித்தனர்.






