என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபைக்கு 2 நாட்கள் விடுமுறை- மானியக்கோரிக்கை 24-ந் தேதி தொடக்கம்
- திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூடுகிறது.
- முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை இடம் பெறுகிறது.
சென்னை:
தமிழக பட்ஜெட் கடந்த 14-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் 15-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
விவாதத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பதில் அளித்து பேசினர். சட்டசபைக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும்.
திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரமும், அதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதமும் நடக்க இருக்கிறது. அதன்படி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை இடம் பெறுகிறது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசுகின்றனர். உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு, அமைச்சர் துரைமுருகன் பதில் உரையும், துறை சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.






