என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்ற 11 பேர் கைது
- 34 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை- டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24), ஆலந்தூரை சேர்ந்த ரூபேஷ் (24), ஆவடியைச் சேர்ந்த விஷ்ணு (19), கொளத்தூரைச் சேர்ந்த சேது ரோஷன் (20), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சந்திரன் (52), அசோக்நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் (25), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அரவிந்த் (20), திருவொற்றியூரைச் சேர்ந்த சாலமன் (19), கேரளாவைச் சேர்ந்த வினித் (28), சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23), கொரட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 11 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 34 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






