நாய் கடித்து 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது. தினேஷ் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நாய் கடித்து 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஜல்லுத்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ் (வயது15). இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com