search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாழ்த்தப்பட்ட-நரிக்குறவ இன மக்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விஜயகாந்த்
    X

    விஜயகாந்த் தானமாக வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதற்கான பட்டாவை காண்பித்தபோது எடுத்தபடம்.

    தாழ்த்தப்பட்ட-நரிக்குறவ இன மக்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விஜயகாந்த்

    • விஜயகாந்த் கடந்த 1998-ம் ஆண்டு, நிலத்தை நேரடியாக வழங்காமல் அரசு மூலம் வழங்கினார்.
    • விஜயகாந்த் மறைந்தாலும், அவர் எங்களுக்கு இருப்பிடம் தந்து வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்.

    மதுரை:

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்களின் வரிசையில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்தும் இன்று மேலோங்கி நிற்கிறார்.

    மதுரை மண்ணில் பிறந்தாலும், காலப்போக்கில் மறந்த வரலாறும் உண்டு. ஆனால் பிறந்த மண்ணுக்கு எதையாவது, இல்லை... இல்லை... ஏராளமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர் விஜயகாந்த். அதற்கு சான்றாக பல இருக்க கோபுரத்தில் வைத்து பார்க்கக்கூடிய வகையிலும் அவரது ஈகை குணம் இருந்தது என்பதற்கு சான்றாக தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் தனது தந்தை அழகர்சாமி, கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாங்கிய 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வைத்திருந்தார். தந்தையின் மறைவுக்கு பிறகு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருந்த விஜயகாந்த் தனக்கு தந்தை சேர்த்து வைத்திருந்த அந்த நிலத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.

    அதன்படி இயன்றதை வழங்குவோம், இல்லாதோருக்கு என்பதற்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் நரிக்குறவ இன மக்களுக்கு மட்டும்தான் வழங்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்த விஜயகாந்த் கடந்த 1998-ம் ஆண்டு, தான் நேரடியாக வழங்காமல் அரசு மூலம் வழங்கினார். கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த 7 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.21 ஆகும்.

    இதன் மூலம் பயனடைந்த அப்பகுதியை சேர்ந்த சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை நாங்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக தானமாக அளித்தார். இன்று அவர் மறைந்தாலும், அவர் எங்களுக்கு இருப்பிடம் தந்து வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார் என்றனர்.

    Next Story
    ×