search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானதி சீனிவாசன் திடீர் டெல்லி பயணம்
    X

    டெல்லி செல்வதற்கு முன்பாக கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

    வானதி சீனிவாசன் திடீர் டெல்லி பயணம்

    • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது
    • நான் மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.வாக எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வழக்கமான பணிகளுக்காகவே நான் டெல்லி செல்கிறேன். இன்று மாலை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே நான் டெல்லி செல்கிறேன். எனவே நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் கிடையாது.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளி வருகிறது. ஆனால் இதுவரை அந்த மாதிரி எதுவும் நடந்துள்ளதாக எனக்கு தெரியவில்லை. அது என் வேலையும் கிடையாது.

    நான் மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.வாக எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி வருகிறாரா? என்பது குறித்தும் எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல், சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×