என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலம் மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனங்கள்.. குடிநீர் லாரி மூலம் தீயணைப்பு
- தீப்பற்றியதால் உரிமையாளர்கள் அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று உயிர்தப்பினர்.
- என்ன செய்வதென தெரியாமல் தவித்தபோது அவ்வழியாக குடிநீர் லாரி வந்தது.
சேலம்:
சேலத்தை அடுத்த மாமாங்கம் மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று உரசி விபத்துக்குள்ளாகின. கீழே விழுந்ததும் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதனால் அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றதால் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனத்திற்காக காத்திருந்தபோது இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
என்ன செய்வதென தெரியாமல் தவித்தபோது அவ்வழியாக குடிநீர் லாரி வந்தது. அந்த லாரியில் இருந்த தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






