என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியபாளையத்தில் லாரி மோதி வாலிபர் பலி
- சுதாகர் பெரியபாளையத்தில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி தல்லேரி தெருவில் வசித்து வந்தவர் சுதாகர் (வயது38). இவர் பெரியபாளையத்தில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை வேலை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரியபாளையத்தில் உள்ள வங்கி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய சுதாகர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






