என் மலர்

  தமிழ்நாடு

  கோடை விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
  X

  கோடை விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
  • கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  கோபி:

  கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

  இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

  மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

  இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

  இதே போல் கொடிவேரியில் கடந்த 2 மாதமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதி வருகிறது.

  இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் நேற்று (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

  இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

  ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

  தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

  கடந்த சில நாட்களாக கொடிவேரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொது மக்கள் தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர்.

  இதையொட்டி கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  Next Story
  ×