என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிகரிக்கும் வெயில்- தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
    X

    அதிகரிக்கும் வெயில்- தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தபோதும் தேக்கடி ஏரியில் 6-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சீதோஷ்ணநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கூடலூர்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்குள்ள வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வனவிலங்குகளை பார்ப்பதற்கு வருகின்றனர். மேலும் ஏரியில் படகுசவாரி செய்தபடி இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தேக்கடிக்கு வருகின்றனர்.

    பனிப்பொழிவை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்பத்துடன் மலைத்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தபோதும் தேக்கடி ஏரியில் 6-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகுசவாரி செய்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்காக இங்கு அழைத்துவரப்படுகின்றனர். இதமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கோடைகாலம் தொடங்கிய நிலையில் மழை பெய்தால் தேக்கடி ஏரியில் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் வனப்பகுதியில் இருந்து அதிகளவு வனவிலங்குகள் ஏரி பகுதிக்கு வரும் என சுற்றுலா வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×