என் மலர்

  தமிழ்நாடு

  அரூர் சாலையில் சுற்றுலா பஸ்-டெம்போ வேன் மோதி விபத்து: 11 பேர் படுகாயம்
  X

  விபத்தில் உருக்குலைந்து காணப்படும் பஸ்சையும், டெம்போ வேனையும் காணலாம்.

  அரூர் சாலையில் சுற்றுலா பஸ்-டெம்போ வேன் மோதி விபத்து: 11 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படுகாயம் அடைந்த ஒருவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தருமபுரி:

  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அருகம்பேடு, ஜோதிநகர் ஆகிய இரு கிராமங்களில் உள்ள மக்கள் 55 பேர், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து மூலம் இரவு 11 மணி அளவில் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமாலை முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளனர்.

  அப்போது அரூர் வழியாக இன்று விடியற்காலை சேலம் நோக்கி செல்லும்போது நான்கு வழி சாலையில் டோல்கேட் அமைக்கும் பணிக்காக இருவழி சாலையை ஒரு வழி சாலையாக தேசிய நெடுஞ்சாலைதுறையினர் அமைத்துள்ளனர்.

  இந்நிலையில் ஒருவழி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது சுற்றுலா பேருந்தும், அந்த வழியாக வந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  மேலும் படுகாயம் அடைந்த ஒருவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×