search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்
    X

    தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்

    • ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
    • நேற்று தங்கம் விலை ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால் பவுன் ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர், ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

    நேற்று தங்கம் விலை ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.55,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×