என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்றே பணம் பெற்றுக்கொள்ளலாம்: அரசு உத்தரவு
- மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
- காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை ரொக்கப்பணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பணம் வழங்கப்பட்டு வந்தது.
23-ந்தேதி வரை ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் கூட்டம் இல்லாத காரணத்தால் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் இன்று வந்துகூட பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக ரேஷன் கடைகளுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். எந்த தேதி டோக்கனாக இருந்தாலும் பணம் வழங்கி விடுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story






