என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மக்களிடம் செல் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது.
- மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக, "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மக்களிடம் செல் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒருநாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும்.
அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும்.
நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம், குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்றார்.
Next Story






