என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
    X

    அர்ஜுனன்

    திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனன் ஏற்கனவே ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜூனன் (வயது 52). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது.

    இதையடுத்து அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதோடு, டாக்டர்கள் ஆலோசனைபடி கொரோனாவுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×