search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்
    X

    நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது.
    • மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நடப்பாண் டில் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 ஆயிரம் கூடுதலாகும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அந்தப் பணிகள் நிறைவடைந்து வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கும் நடை முறை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது.

    இந்நிலையில், விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது:-

    நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26 ஆயிரத்து 805 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 394 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×