search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கண் சிகிச்சைக்கு உதவிய கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சிறுமி
    X

    கண் சிகிச்சைக்கு உதவிய கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சிறுமி

    • தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
    • சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.

    தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    Next Story
    ×