search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
    X

    தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

    • மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர்.
    • வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடி நடந்தது தெரிய வந்தது. இது குறித்து அப்போதைய வங்கி மேலாளர் தெய்வசிகாமணி என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரி்வு போலீசில் புகார் அளித்தார்.

    வங்கி நகை மதிப்பீட்டாளரான கருப்பூர் தண்ணீர் தொட்டியை சேர்ந்த சக்திவேல் 60 உள்பட 25 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாருக்கு பயந்த சக்திவேல் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    அதன் பிறகு இந்த வழக்கு வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். மேலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த சின்ன திருப்பதி சரவணன் (53), ரூ.82 ஆயிரம் மோசடி செய்த அரிசிபாளையம் கிேஷார்குமார் (42), 1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்த புது கல்லாங்குத்து புதூரை சேர்ந்த சுகவேனேஸ்வரன் (42) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்ப்பயட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×