என் மலர்
தமிழ்நாடு

தே.மு.தி.க. உள்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்- விஜயகாந்த் அறிவிப்பு
- தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.
- தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
தே.மு.தி.க. முதல்கட்ட அமைப்பு தேர்தல் வருகிற 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்.
ஒன்றிய ஊராட்சி பூத் கிளை கழகங்கள், பேரூராட்சி வார்டு கிளை, நகராட்சி வார்டு பூத் கிளை, நகராட்சி வார்டு கழகம், மாநகராட்சி வட்டங்களில் உள்ள பூத் வாரியாக கிளை கழகங்களுக்கு, பூத் கிளை கழக செயலாளர், பூத் அவைத்தலைவர், பூத் பொருளாளர், 2 பூத் துணை செயலாளர்கள், 2 பிரதிநிதிகள், 2 பூத் செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட 9 கிளை கழக நிர்வாகிகள் ஊராட்சி கழகத்திற்கு, ஊராட்சி கழக செயலாளர், 2 துணை செயலாளர்கள், மாநகராட்சி வட்ட கழகத்திற்கு, ஒரு வட்ட செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், 4 பகுதி பிரதிநிதிகள் கொண்ட 11 பேர் ஆகியவற்றுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெறும்.
மாவட்ட தேர்தல் ஆணையர்களாக தென்சென்னை வடக்கு-எம்.ஆர்.பன்னீர் செல்வம், மத்திய சென்னை மேற்கு-பி.கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை மேற்கு-சி.மகாலட்சுமி, தென் சென்னை தெற்கு-செல்வ. அன்புராஜ், வடசென்னை கிழக்கு-ஜி.கே.மகேந்திரன், மத்திய சென்னை கிழக்கு-எஸ்.கணேசன், மேற்கு சென்னை-எம்.விஜய கண்ணன், ஆவடி மாநகர்-சுபமங்களம் டில்லிபாபு, செங்கல்பட்டு-ஜி.காளி ராஜன், திருவள்ளூர் கிழக்கு-கு.நல்லதம்பி, திருவள்ளூர் மேற்கு-செ.தினகரன், காஞ்சீபுரம்-பி.வேணுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.