search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளகோவில் அருகே போலீஸ் போல் நடித்து தொழிலாளியை காரில் கடத்தி கொலை செய்த கும்பல்
    X

    வெள்ளகோவில் அருகே போலீஸ் போல் நடித்து தொழிலாளியை காரில் கடத்தி கொலை செய்த கும்பல்

    • மோகன சுந்தரத்தை அன்புகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அன்புகுமார் உள்பட 3பேரையும் தேடி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சின்னகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது43),தொழிலாளி. இவரது மனைவி செல்வி (41) . இவர்களுக்கு பூவரசன் (13) என்ற மகனும், பூவிழி (10) என்ற மகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்விக்கும் , மோகனசுந்தரத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி, மகன் மகளுடன் கோவை மாவட்டம் செஞ்சேரி மலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் மோகனசுந்தரம் குடும்பத்திற்கும், அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி சம்பூர்ணம் என்பவரது குடும்பத்திற்கும் இட பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோகன சுந்தரத்திற்கும் சம்பூரணத்திற்கும் தகராறு ஏற்படவே, சம்பூரணம் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரத்தை கைது செய்து தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

    கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த மோகனசுந்தரம் காலை மாலை வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட்டு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு மோகன சுந்தரத்துக்கும், சம்பூரணத்திற்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் சம்பூரணத்தின் மகன் அன்புகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 2பேர் ஆகியோர் மோகன சுந்தரத்தை காரில் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி காரில் ஏற்றி சென்றனர். அதன் பிறகு மோகன சுந்தரத்தை காணவில்லை. நேற்று முத்தூர் வரட்டு கரை அருகே கீழ்பவானி பாசன வாய்க்கால் அருகே காட்டுப்பகுதியில் மோகன சுந்தரம் பிணமாக கிடந்தார்

    இது குறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் மோகன சுந்தரத்தை அன்புகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அன்புகுமார் உள்பட 3பேரையும் தேடி வருகின்றனர். முன்விரோத தகராறில் மோகன சுந்தரத்தை கடத்தி சென்று கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. 3பேரை பிடித்து விசாரிக்கும் பட்சத்தில் கொலைக்கான காரணம் குறித்து முழு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×