search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓலா, ஊபர் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
    X

    ஓலா, ஊபர் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

    • ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
    • வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×