search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மே 15-ந் தேதிக்குள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- தமிழக அரசு உத்தரவு
    X

    மே 15-ந் தேதிக்குள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

    • புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
    • ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும்.

    சென்னை:

    கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வாக்காளர் பட்டியல் சரிவர தயாரிக்கப்பட வேண்டி உள்ளது.

    அதற்கான கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் விதி மற்றும் உறுப்பினர் சேர்க்கை படிவம் 3 முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யவும் அதற்கான காலமும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    15.3.2023 உள்ள உறுப்பினர் பட்டியல் வெளியிடுதல், வருகிற 14-ந்தேதி கால வரையறை முடிவுறுகிறது.

    புதிதாக உறுப்பினர்களை சேர்க்க மே மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள நபர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை 15.6.2023-க்குள் சேகரிக்க வேண்டும். இறந்த உறுப்பினர்களின் பட்டியலை 15.7.23-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியற்ற உறுப்பினர்களின் பட்டியலை 31.7.2023-க்குள் தயாரிக்க வேண்டும். தகுதியான உறுப்பினர் பட்டியலை 16.8.2023-க்குள் வெளியிட வேண்டும்.

    தகுதியான உறுப்பினர்கள் பட்டியல்கள் மீதான ஆட்சேபனை கோரிக்கை பெற 23.8.2023 வரை 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். ஆட்சேபனை, கோரிக்கைகள் தொடர்பாக 31.8.2023-க்குள் பதில் பெறுதல் வேண்டும். ஆட்சேபனைக்கு 15.9.2023-க்குள் பதில் அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் இறுதி பட்டியல் ஒப்புதலுக்கு 30 நாட்கள் 15.10.2023 வரை அவகாசம் வழங்குதல், பொதுப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டு தகுதியான உறுப்பினர்கள் இறுதி பட்டியல் 31.10.2023 அன்று வெளியிடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×