என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள்  நடைபயணம் தள்ளிவைப்பு
    X

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் தள்ளிவைப்பு

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து.

    பா.ஜ.க. தமிழ் நாடு தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழ் நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில நாட்கள் நடைபயணம் நிறுத்தப்பட்டு, மூன்றாவது கட்டமாக அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் துவங்க இருந்தது.

    இந்த நிலையில், அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சென்னையில் நாளை (அக். 3) காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும், இல்லையெனில் நேரம் மாற்றி அறிவிக்கப்படும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி சென்றதை அடுத்து என்ன செய்வது என்பது பற்றி டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக டெல்லி வருமாறு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்தது.

    இதை ஏற்று கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அண்ணாமலை புறப்பட்டு சென்றார். டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    Next Story
    ×