என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன அதிகாரி பலி
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன அதிகாரி பலி

    • விபத்தில் பாலியான பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை, டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது31). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் பாஸ்கர் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் இடதுபுறம் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பாலியான பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×