என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வேங்கைவயல் விவகாரம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம்- ஐகோர்ட் உத்தரவு
- சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று நீதிபதிபதிகள் கருத்து.
- சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.
இந்தநிலையில், வழக்குப் பதிவு செய்து 90 நாட்கள் ஆகியும் இதுவரை ஒருவரைக் கூட போலீசார் கைது செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர்.
சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.