search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருமான வரி சோதனையில் கண்டுபிடித்த விபரங்களை வெளியிடாதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி
    X

    வருமான வரி சோதனையில் கண்டுபிடித்த விபரங்களை வெளியிடாதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

    • அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.
    • சோதனைகளால் கட்சிகளை முடக்கவோ மக்கள் ஆதரவை பெறவோ முடியாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு மக்கள் என்றுமே ஆதரவு தரப்போவதில்லை. தூத்துக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடந்தது. இது மிகப்பெரிய எழுச்சியுடன் நடந்தது. அத்தனை பேரும் காங்கிரஸ் உணர்வுடன் கலந்து கொண்டார்கள்.

    அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் காசு கொடுத்து கூட்டத்தை சேர்க்க முயற்சிக்கிறார்கள். பணத்தை வாரி இறைத்தும் பலனில்லை.

    மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெற போவதாக அண்ணாமலை கனவு காண்கிறார். கடந்த தேர்தலில் அண்ணாமலைக்கே செல்வாக்கு இல்லாமல் போனதை மக்கள் பார்த்தார்கள். அந்த கோபத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமான வரித்துறையை ஏவி விட்டார்கள்.

    சோதனை நடத்தினார்கள். வழக்கு போட்டார்கள். ஆனால் செந்தில் பாலாஜி வீட்டில் என்ன கண்டு பிடித்தார்கள்? என்ன கைப்பற்றினார்கள்? என்ற எந்த விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ வெளியிடவில்லையே.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. இப்போதும் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். சோதனைகளால் கட்சிகளை முடக்கவோ மக்கள் ஆதரவை பெறவோ முடியாது. சாதனைகளை சொல்லித்தான் ஆதரவை பெற முடியும். மோடி அரசாங்கத்துக்கு சாதனை என்று சொல்ல எதுவுமில்லை. மக்களிடையே வெறுப்பையும், மோதலையும் தான் உருவாக்கி வருகிறது.

    தி.மு.க. அரசு சாதனைகளை சொல்லி மக்கள் ஆதரவை பெற்றுள்ளது. அதை எதிர்கொள்ள முடியாமல்தான் சோதனையை ஏவுகிறார்கள். தி.மு.க.வும் சோதனைகளை கண்டு அஞ்சவில்லை. மக்களும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளை பார்த்து பார்த்து மக்களுக்கு மோடி அரசாங்கம் மீது கூடுதல் வெறுப்புதான் வரும்.

    வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரியில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் 2 மாதத்தில் கூட்டங்களை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×