என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கல்பட்டு- ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
    X

    செங்கல்பட்டு- ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

    • தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது.
    • தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    ஐபோன் 14 மற்றும் 15 செல்போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக கணப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×