search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்சார ரெயிலில் பிரேக் கோளாறால் நடுவழியில் நிறுத்தம்
    X

    மின்சார ரெயிலில் 'பிரேக்' கோளாறால் நடுவழியில் நிறுத்தம்

    • மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த ரெயில்கள் மாற்று பாதையில் சென்றன.
    • பிரேக் பழுதுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    வேலூர் கன்டோன் மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. ஏராளமான பயணிகள் அதில் பயணம் செய்தனர்.

    திருவள்ளூர் அருகே செஞ்சிபனம்பாக்கம் - கடம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு இடையே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்த போது அதில் பயன்படுத்தும் பிரேக்கில் கோளாறு இருப்பது தெரிந்து.

    மேலும் ஒரு பெட்டியின் கீழ்ப்பகுதியில் சக்கரம் சரிவர சுற்றாமல் உரசி புகையும் வந்தது. இதைத்தொடர்ந்து நடுவழியிலேயே மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பிரேக் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் பணிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்த மின்சார ரெயிலில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் அங்கிருந்து கடம்பத்தூர், மற்றும் திருவள்ளூருக்கு நடந்தும் வாகனங்களிலும் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வேறு மின்சார ரெயில்களில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

    வேலூரில் இருந்து வந்த மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த ரெயில்கள் மாற்று பாதையில் சென்றன. சுமார் 1/2 மணி நேரத்திற்கு பின்னர் பிரேக் பழுது சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மின்சார ரெயில் சென்னை கடற்கரை நோக்கி மெதுவாக சென்றது. பிரேக் பழுதுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான நேரத்தில் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டு பிரேக் பழுது பார்க்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×