என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
- 12 புதுமுகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
- பா.ஜ.க.வில் இருந்து, அ.தி.மு.க.வுக்கு வந்தவர்களுக்கு, கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
சென்னை:
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் தொடங்கி உள்ளார்.
குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டு கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளார்.
அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கட்சி மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்து உள்ளார். அந்த மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை நியமித்து இருக்கிறார். மேலும் அ.தி.மு.க.வில் சில மூத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையடுத்து அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற ரீதியில் நிர்வாகிகளை நியமிக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார். அந்த வகையில் நேற்று கட்சியில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் கட்சி ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கை 75-ல் இருந்து 82 ஆக உயர்ந்து உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த 6 மாவட்டச் செயலாளர்கள் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அவற்றோடு மேலும் மாவட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கும் மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் 12 புதுமுகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பா.ஜ.க.வில் இருந்து, அ.தி.மு.க.வுக்கு வந்தவர்களுக்கு, கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், மருத்துவ அணி இணை செயலர் நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலர் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.ம.மு.க.வில் இருந்து வந்த மனோகரன், காங்கிரசில் இருந்து வந்த மனோ, கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்த அன்வர்ராஜா ஆகியோர், கட்சியின் அமைப்பு செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திருநெல்வேலி என செயல்பட்டு வந்த மாவட்டக் கழக அமைப்புகள் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
ராணிப்பேட்டை கிழக்கு:-(அரக்கோணம், சோளிங்கர்)-சு.ரவி, ராணிப்பேட்டை மேற்கு:-(ராணிப்பேட்டை, ஆற்காடு)-எஸ்.எம். சுமார், திருவண்ணாமலை கிழக்கு:-(திருவண்ணாமலை , கீழ்பென்னாத்தூர்)-எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்டம்:-(ஆரணி, போளூர்) மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதாவும் (போளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் செய்யார் (68), வந்தவாசி (தனி) (69) மாவட்டச் செயலாளராக தூசி கே.மோகனும் (மாவட்ட செயலாளர்), திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கலசபாக்கம் (65), செங்கம் (தனி) (62) மாவட்டச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் (கழக விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்),
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் திருவிடைமருதூர் (தனி) (170), கும்பகோணம் (171) மாவட்டச் செயலாளராக ஆர்.கே.பாரதி மோகனும் (திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியச் செயலாளர்), தஞ்சாவூர் மேற்கு மாவட்டத்தில் பாபநாசம் (172), திருவையாறு (173) மாவட்டச் செயலாளராக எம்.ரெத்தின சாமியும் (பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர்), தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தல் தஞ்சாவூர் (174), ஒரத்தநாடு (175) மாவட்டச் செயலாளராக எம்.சேகரும் (ஒரத்த நாடு பேரூராட்சி மன்றத் தலைவர்), தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் பட்டுக்கோட்டை (176), பேராவூரணி (177) மாவட்டச் செயலாளராக சி.வி.சேகர் (மாவட்ட புரட்சித்தலைவி, பேரவைச் செயலாளர்),
தேனி கிழக்கு மாவட் டத்தில் ஆண்டிப்பட்டி(198), பெரியகுளம் (தனி) (199) மாவட்டச் செயலாளராக முருக்கோட்டை எம்.பி.ராமரும் (மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர்), தேனி மேற்கு மாவட்டத்தில் போடிநாயக்கனூர் (200), கம்பம் (201) மாவட்டச் செயலாளராக எஸ்.டி.கே. ஜக்கையனும் (முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர்), திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் திருநெல்வேலி (224), பாளையங்கோட்டை (226) மாவட்டச் செயலாளராக தச்சை என்.கணேசராஜாவும் (மாவட்ட செயலாளர்), திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் அம்மாசமுத்திரம் (225), நாங்குநேரி (227), ராதாபுரம் (228) மாவட்டச் செயலாளராக இசக்கி சுப்பையாவும் (அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்) நியமிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்பு செயலாளர்களாக ஜி.பாஸ்கரன் (முன்னாள் அமைச்சர், சிவகங்கை), அ.அன்வர்ராஜா (முன்னாள் அமைச்சர், ராமநாதபுரம்), ஆர்.மனோகரன் (அரசு தலைமை முன்னாள் கொறடா, திருச்சி), வி.ராமு (மாவட்ட முன்னாள் செயலாளர், வேலூர்), ராயபுரம் மனோ (வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்), துரை.செந்தில் (மதுக்கூர் கிழக்கு ஒன்றியம், தஞ்சாவூர்), ஆர்.காந்தி (தஞ்சாவூர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஐ.எஸ்.இன்பதுரை (திருநெல்வேலி), சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளராக எஸ்.அப்துல் ரகீம் (முன்னாள் அமைச்சர், திருவள்ளூர்), கொள்கை பரப்பு இணைச் செயலாளராக விந்தியா (தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்), கொள்கை பரப்பு துணைச்செயலாளராக எஸ்.அய்யாத்துரை பாண்டியன் (சங்கரன் கோவில்), கொள்கை பரப்பு இணைச் செயலாளராக கி.மாணிக்கம் (சோழவந்தான்), அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளராக ஏ.டி.சி. தனபால் (அயோத்தியாப்பட்டினம், சேலம்), வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளராக இ.பாலமுருகன் (வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்), வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக என்.மாரப்பன் (கரூர் மாவட்டம்), மருத்துவ அணி இணைச் செயலாளராக பி.சரவணன் (திருப்பரங்குன்றம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை கிழக்கு, தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களில் நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர்-பெருமாள்நகர் கே.ராஜன், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர்-எம்.ராம்குமார், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர்-டி.அய்யப்பன் (எ) சண்முகபிரபு, திருவையாறு தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜா (எ) தண்டபாணி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்-எஸ்.வி.திருஞான சம்பந்தம்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்-கே.கே.சிவசாமி, எஸ்.ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி, மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்களாகவும், தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்தியம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகரக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக என்.தளவாய் சுந்தரமும் (அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்), திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக ஜெ.சீனிவாசனும் (திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர்), பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வனும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக (கும்பகோணம் மாநகரம்) ராம. ராமநாதனும், தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளராக எஸ்.சரவணனும் (மருத்துவக் கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரனும் (பாலாஜி நகர், வரதராஜபுரம், கோவை), துணைத்தலைவர்களாக என்.ராஜராஜ சோழனும் (தெற்கு அக்ரஹாரம், வலங்கைமான் அஞ்சல், திருவாரூர் மாவட்டம்), டி.கவுரி சங்கர் (நாவினிப்பட்டி அஞ்சல், மேலூர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்), செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யனும் (பழைய விளாச்சேரி சாலை, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம்), இணைச் செயலாளர்களாக எம்.கோவை சத்யனும் (தியாகராய நகர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்), துணைச் செயலாளர்களாக டி.பிரசாத்தும் (ஆர்.கே.சாலை, மயிலாப்பூர், தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம், இந்திராணி சுடலைமுத்துவும் (விக்னராஜபுரம், வேங்கைவாசல், சென்னை புறநகர் மாவட்டம்), பொருளாளராக எஸ்.டி. தர்மேஷ்குமாரும் (ஆற்காடு குப்பம் கிராமம், திருத்தணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம்) நியிக்கப்படுகிறார்கள்.
கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி கிழக்கு, புதுச்சேரி மேற்கு ஆகிய மாநிலக் கழகங்கள், கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு இன்று முதல் 'புதுச்சேரி மாநிலம்' என ஒருங்கிணைக்கப்பட்டு மாநில அவைத் தலைவராக ஜி.அன்பானந்தமும், மாநில செயலாளராக ஏ.அன்பழகன் (முன்னாள் எம்.எல்.ஏ.) மாநில இணைச் செயலாளர்களாக டாக்டர் மு.ராமதாசும், எம்.மகாதேவியும், மாநில துணைச் செயலாளர்களாக உமா (எ) கோவிந்தம்மாளும், வையாபுரி மணிகண்டமும் (முன்னாள் எம்.எல்.ஏ.), டி.குணசேகரனும், மாநிலப் பொருளாளராக பி.ரவி பாண்டுரங்கனும் நியமிக்கப்படுகிறார்கள்.






