என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடுத்த கட்ட அதிரடிகளை தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டம்: 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார்
    X

    அடுத்த கட்ட அதிரடிகளை தொடங்க எடப்பாடி பழனிசாமி திட்டம்: 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார்

    • விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக கே.சி.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அ.தி.மு.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

    அமைப்பு ரீதியாக காலியாக இருக்கும் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது, வகித்த பொறுப்புகளில் சரியாக செயல்படாதவர்களை மாற்றி விட்டு புதிய நிர்வாகிகளை நியமிப்பது ஆகிய வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக கே.சி.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக பிலிப்வாசு, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவராக கமல் குமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளராக பலராம், மகளிர் அணி துணை தலைவராக சுபா, துணை செயலாளர்களாக கனகலட்சுமி, விஜயா ஆகியோரும் மாணவரணி செயலாளராக ராஜ்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இதே போல் விவசாய பிரிவு, மருத்துவ அணி, வர்த்தக அணி, கலைப்பிரிவு, இலக்கிய அணி உள்பட அனைத்து பிரிவுகளிலும் காலியாக இருந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவராக முருகன், துணை செயலாளராக உஷா, வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளராக துரைபாண்டி, விவசாய பிரிவு செயலாளராக ராம் குமார், இலக்கிய அணி செயலாளராக ரகு, கலைப்பிரிவு செயலாளராக சிவ சக்தி.

    மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய செயலாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளார்கள்.

    தொகுதி வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது, கூட்டங்கள் நடத்துவது ஆகிய பணிகளை உடனடியாக தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×