என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொங்கல் பரிசு தொகையை ரூ.5000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொங்கல் பரிசு தொகையை ரூ.5000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    • பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    • தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பரிசு தொகுப்புடன் அளித்து வந்த கரும்பு இம்முறை இடம்பெறவில்லை. இதனால் விவசாயிகள் உள்ளிட்டோர் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×