என் மலர்
தமிழ்நாடு
X
சமுதாய நலக்கூடம்- விஜய் வசந்த் எம்பி திறந்து வைத்தார்
Byமாலை மலர்25 Sept 2023 10:32 PM IST
- சமுதாய நலக்கூடம் தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு வடசேரி சக்தி நகரில் சமுதாய நலக்கூடம் தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய நலக்கூடம் கட்டுவதுற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா, மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X