என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
    • வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

    இதையொட்டி வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

    Next Story
    ×