search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    உடுமலை அமராவதி-திருமூர்த்தி அணைகளில் சரியும் நீர்மட்டம்
    X

    உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளதை படத்தில் காணலாம்.

    உடுமலை அமராவதி-திருமூர்த்தி அணைகளில் சரியும் நீர்மட்டம்

    • திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது.
    • உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி., தொகுப்பு அணைகளின் கடைசியாக உள்ள இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    5 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் உடுமலை நகரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன.

    பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

    திருமூர்த்தி அணையில் இன்றைய நீர்மட்டம் 35. 97 அடியாக உள்ளது. நீர்வரத்து 603 கன அடியாக உள்ளது. பிரதான கால்வாயில் 417 கன அடி, கால்வாயில் 65 கன அடி , நல்லாற்றில் 50 கன அடி, குடிநீருக்கு 21 கன அடி என மொத்தம் 555 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் உடுமலை அருகே உள்ள மற்றொரு அணையான அமராவதி அணை 90 அடி உயரம் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதேபோல கல்லாபுரம்- ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். அமராவதி அணை நீர்பாசன வசதி பெற மட்டுமின்றி கரூர் வரையிலான அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை ஆகியவற்றையும் நிறைவேற்றி வருகிறது. இந்த அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அமராவதி அணையில் இன்றைய நீர்மட்டம் 61.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 86 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், திருமூர்த்தி- அமராவதி அணைகள் நிரம்பவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தான் அணைகள் நிரம்பும். எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×