என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
- சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






