search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வம் சூறாவளி சுற்றுப்பயணம்
    X

    ஓ.பன்னீர்செல்வம் சூறாவளி சுற்றுப்பயணம்

    • ஈரோடு மாவட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.
    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.

    இதையடுத்து வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 24-ந்தேதி வரை சுமார் ஒரு மாத காலம் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்கள் வாரியாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன் விவரம் வருமாறு:-

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான வருகிற 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு கோவையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பணத்தை தொடங்குகிறார். அன்று மாலை நீலகிரி மாவட்டத்தில் அவர் பேசுகிறார்.

    மறுநாள் 27-ந்தேதி காலையில் திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.

    28-ந்தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், 29-ந்தேதி கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் ஓ.பி.எஸ். பின்னர் சென்னை திரும்புகிறார்.


    பின்னர் ஜனவரி 3-ந் தேதி காலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஓ.பி.எஸ், மாலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் 4-ந்தேதியும், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தினருடன் 5-ந்தேதியும் ஆலோசனை மேற்கொள்கிறார். ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செய்யும் மற்ற மாவட்டங்கள் பின்வருமாறு:-

    6-ந்தேதி திருவண்ணாமலை, திருப்பத்தூர், 7-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, 8-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 9-ந்தேதி கடலூர், புதுவை, 10-ந்தேதி அரியலூர், திருச்சி, 11-ந் தேதி தேனி, மதுரை, 12-ந் தேதி விருதுநகர், தூத்துக்குடி, 19-ந்தேதி நெல்லை, தென்காசி, 20-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, 21-ந்தேதி புதுக்கோட்டை, தஞ்சை, 22-ந்தேதி நாகை, மயிலாடுதுறை, 23-ந்தேதி திருவாரூர், 24-ந்தேதி குமரி மாவட்டம்.

    இந்த கூட்டங்களில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    Next Story
    ×