search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 120 டன் தர்பூசணி குவிகிறது: கிலோ ரூ.7-க்கு விற்பனை
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 120 டன் தர்பூசணி குவிகிறது: கிலோ ரூ.7-க்கு விற்பனை

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார்.
    • தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்கும் பழ ஜுஸ், மோர், தர்பூசணி, கிர்ணிபழம், இளநீர் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி பருகுகிறார்கள். இதனால் தற்போது சாலையோரங்களில் ஏராமான குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.

    அதிகமானோர் வெயிலுக்கு இதமாக தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இதனால் கடைகளில் தர்பூசணி வியாபாரம் களை கட்டி வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரும். தினமும் 120டன்னுக்கு மேல் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார். தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது தினமும் 120 டன்னுக்கு மேல் தர்பூசணிகள் விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள போதிலும் தர்பூசணி பழங்களின் விற்பனை இன்னும் எதிர்பார்த அளவு இல்லை. மொத்த விற்பனை கடைகளில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.7முதல் ரூ.10வரை மட்டுமே விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தர்பூசணி பழங்களின் விலை 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×