search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருப்பாநதி அணை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை
    X

    கருப்பாநதி அணை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை

    • நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதிய நேரத்திற்கு பின்னர் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. பேட்டை, அபிஷேகப்பட்டி, சீதபற்பநல்லூர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பயங்கர இடி-மின்னலும் இடித்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை, பாளை பகுதியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு நேற்று ஒரே நாளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்யும் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×