search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுத்த 3 வாரங்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
    X

    அடுத்த 3 வாரங்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

    • தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்களும் கணித்துள்ளனர். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கோடை வெப்பம் வரும் நாட்களில் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் மேற்கு புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் கோடைமழை பெய்வதற்கான அறிகுறிகள் தற்போது தென்படவில்லை. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெப்பம் தேர்தல் நேரத்தில் இப்போது இருப்பதை விட மேலும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகளும் கணித்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 10 மாவட்டங்களில் 100 டிகிரியை எட்டும் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. இதே வெப்பநிலை அடுத்த சில நாட்களிலும் நீடிக்கவே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக அடுத்த 5 நாட்களுக்கு அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசவுகரியமான நிலை ஏற்படும். புழுக்கம், வியர்வை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×