search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலாஷேத்ரா கல்லூரியில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவு- விரைவில் அறிக்கை தாக்கல்
    X

    கலாஷேத்ரா கல்லூரியில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவு- விரைவில் அறிக்கை தாக்கல்

    • புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • மாணவிகளிடம் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தியது.

    நேற்று மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர். கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராமதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக சுமார் 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், நிர்வாகத்தினர் யாரும் இல்லாமல் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இன்று பிற்பகல் விசாரணை நிறைவடைந்தது.

    இதையடுத்து இறுதி அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் எஸ்.பி. மகேஷ்வரன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×