என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராவணனை அவமதிப்பதை ஏற்க முடியாது- சீமான்
- பிரிஸ்பேன் நகரங்களில் ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
- ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகிற 27-ந்தேதி ராவண வதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை இராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் ராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






