என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இன்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கைது பற்றிய தகவல்கள்: நான் காத்திருக்கிறேன்- சீமான் பேட்டி
- மேற்கு வங்கத்திலேயே எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவீர்கள்.
- காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் வேறு வேறு கட்சிகள் தான். ஆனால் அவர்களது கொள்கைகள் ஒன்றுதான்.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி, எல்லாமே பாரதிய ஜனதா தான். அதனால் வெறுப்பு அரசியலை பற்றி அவர்கள் பேசக்கூடாது. அவர்கள் செய்வது என்ன விருப்பு அரசியலா? மொழி, மதம், சார்ந்து பிரித்து இருப்பவர்கள் அவர்கள் தான்
திராவிடத்தை ஒழிக்க வேண்டுவது என்பது என் எண்ணம் அல்ல. தமிழ் தேசியத்தை வளர்ப்பது என் எண்ணம். பெருமை பீத்துவது போல சந்திரனுக்கு, சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறேன் என்கிறார்கள். முதலில் இங்கே இருப்பவர்களுக்கு நீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.
மேற்கு வங்கத்திலேயே எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவீர்கள். காஷ்மீரில் இருந்து ஒரே ரோடு ஏற்றுக்கொள்கிறேன், ஒரே கொள்கை ஏற்றுக்கொள்கிறேன். ஒரே நீர் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு முன்னால் கர்நாடகாவில் இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு வாங்கி கொடுங்கள்.
2024-ல் எனக்கு 4 பேரும் எதிரி தான் (திமுக, பாஜக, அதிமுக, காங்கிரஸ்). காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் வேறு வேறு கட்சிகள் தான். ஆனால் அவர்களது கொள்கைகள் ஒன்றுதான்.
ராமதாஸ், திருமாவளவன் போன்ற ஆற்றல்கள் இந்த திராவிட ஆற்றல்களை எதிர்த்து சண்டை செய்ய இயலாமல் சமரசம் செய்து கொண்டு விட்டனர். தனித்து நிற்கும்போது ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களது வாக்கு என்ன? இந்தக் கட்சிகளோடு கூட்டணி வைத்த பிறகு அவர்களது வாக்கு எவ்வளவு என்பதை பார்த்தால் குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2 நாட்களாக தாங்கள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில் நான் காத்திருப்பதாக (ஐ யம் வெயிட்டிங் ) என்றார்.
மேலும் அவர் கூறுகையில் மக்களுக்காக போராடவா? அல்லது விஜயலட்சுமி செயல்கள் பின்னாடி செல்வதா? என்னுடைய தகுதியை தீர்மானிப்பது யார்? என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் யார்? விஜயலட்சுமி என்ன ஆங் சாங் சூகியா, ஐரோம் சர்மிளாவா? இந்த விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி டப்பிங்கா? என்றார்.






