என் மலர்

  தமிழ்நாடு

  கனமழை வாய்ப்பு - சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
  X

  மழை

  கனமழை வாய்ப்பு - சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கும்.

  சென்னை:

  வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.

  இதற்கிடையே, மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

  அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

  இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

  Next Story
  ×