search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல்காந்தி பாத யாத்திரை: குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 2-வது நாளாக ஆய்வு
    X

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய செயலாளர் வேணுகோபால் மற்றும் மேலிடத் தலைவர்கள் பார்வையிட்டபோது எடுத்த படம்.




    ராகுல்காந்தி பாத யாத்திரை: குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 2-வது நாளாக ஆய்வு

    • குமரி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டது.
    • இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை 148 நாட்களில் கடந்து காஷ்மீர் சென்று அடைகிறார்.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    அவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை 148 நாட்களில் கடந்து காஷ்மீர் சென்று அடைகிறார். குமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் அவர் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    இதையொட்டி கன்னியாகுமரியில் ராகுல்காந்தியின் பாத யாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் இடங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் தமிழக மேலிட பார்வையாளருமான வேணுகோபால், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபம் காமராஜர் மணிமண்டபம் பாதயாத்திரை தொடக்க விழா நடக்கும் மைதானமான கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி மற்றும் அவர் பாதயாத்திரை செல்லும் பாதைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, டாக்டர் செல்வகுமார் மாணிக் தாகூர், மயூரா ஜெயக்குமார், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபிமனோகரன், செல்வப்பெருந்தகை, மாநில துணைத்தலைவர் ராபர்ட்புரூஸ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டது. எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதி மணி, ஜெயக்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை பகுதிகளை அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×