search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமித்ஷாவை ஆச்சரியப்படுத்திய பொன்னார்

    • தமிழகத்தில் ஒன்றிண்டு முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறப்பாக செயல்படுவதாக அவர் சர்வே எடுத்து வைத்திருக்கிறார்.
    • அமித் ஷா தமிழக பா.ஜனதா நிலவரம் இன்னும் சரியில்லை என்பதை அமைப்பு ரீதியாக நிர்வாகிகளிடம் சுட்டி காட்டி இருக்கிறார்.

    பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடி என்பது தெரிந்ததே. பொதுவாக அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியினுடைய செயல்பாடுகள், முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அப்பாற்பட்டு ரகசியமாகவும் சேகரித்து விரல் நுனியில் வைத்திருப்பவர்.

    மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது கட்சியை பற்றி ஆஹா... ஓஹோ... என்று அந்த மாநில நிர்வாகிகள் எடுத்துச் சொல்வதை கேட்டு விட்டு... கடைசியில் அவர் ஒவ்வொன்றாக கேட்கும் போது வெல வெலத்து போவார்கள். அப்படித்தான் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அமித் ஷா தமிழக பா.ஜனதா நிலவரம் இன்னும் சரியில்லை என்பதை அமைப்பு ரீதியாக நிர்வாகிகளிடம் சுட்டி காட்டி இருக்கிறார். முக்கியமாக அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது சிலர் ரகசியங்களை அறிந்து கொள்ளவும், நிர்வாகிகளின் நாடி பிடித்து பார்ப்பார். அந்த வகையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மூத்த தலைவரான எச்.ராஜா ஆகிய 4 பேரையும் அழைத்து சிறிது நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

    அப்போது ஜாலியாகவும் சில நிகழ்ச்சிகளை அவர்களுக்குள் பகிர்ந்து இருக்கிறார். அந்த தருணத்தில் ஜாலியாக கேட்பது போல் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வருகிற தேர்தலில் உங்கள் தொகுதியில் உங்களை தவிர போட்டியிட தகுதியானவர்கள் என்றால் யாரை கை காட்டுவீர்கள் என்று கேட்கவும் பொன்.ராதாகிருஷ்ணனும் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையாமல் ஒரு நிர்வாகியின் பெயரை தெரிவித்து இருக்கிறார். அதை கேட்டதும் அமித் ஷாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லையாம். தமிழகத்தில் ஒன்றிண்டு முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறப்பாக செயல்படுவதாக அவர் சர்வே எடுத்து வைத்திருக்கிறார். அதில் ஒருவரைதான் பொன் ராதாகிருஷ்ணனும் கை காட்டி இருக்கிறார். அதை கேட்டதும் ஆச்சரியப்பட்டு அமித் ஷாவே பாராட்டி இருக்கிறார்.

    Next Story
    ×