search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுச்செயலாளர் ஆவார்- பொள்ளாச்சி ஜெயராமன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுச்செயலாளர் ஆவார்- பொள்ளாச்சி ஜெயராமன்

    • எங்களை பொறுத்தவரை ஒற்றை தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒற்றை தலைமை என்பது தேர்வாகி விட்டது. இது அனைவருக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    அதேநேரத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் எதையும் கொண்டுவரக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தனர். புதிய தீர்மானங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், 'எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்' என்றார்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 'எங்களை பொறுத்தவரை ஒற்றை தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பு கொடுக்கிறோம்' என்றார்.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறுகையில், 'அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒற்றை தலைமை என்பது தேர்வாகி விட்டது. இது அனைவருக்கும் தெரியும்' என்று கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், 'அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

    Next Story
    ×