என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3 நகரங்களில் நடத்த இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு- பா.ம.க. அறிவிப்பு
    X

    3 நகரங்களில் நடத்த இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு- பா.ம.க. அறிவிப்பு

    • தமிழ்நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

    சென்னை:

    பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசைக் கண்டித்து வருகிற 17-ந்தேதி வடலூர், 20-ந்தேதி திண்டிவனம், 26-ந்தேதி சேலத்தில் பா.ம.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்; அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×