search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 தேர்வு நாளை தொடக்கம்: பயமாக இருந்தால் மாணவர்கள் 14417 எண்ணில் பேசி உதவி பெறலாம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிளஸ்-2 தேர்வு நாளை தொடக்கம்: பயமாக இருந்தால் மாணவர்கள் "14417" எண்ணில் பேசி உதவி பெறலாம்

    • கடந்த ஜனவரி மாதம் சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் பயன்பெற்றனர்.
    • பொதுவாக தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் கடைசி நிமிடத்தில் பதட்டமும் பரபரப்பும் அடைவதுண்டு

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசியாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடாமல் தவிர்க்க 3200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    1-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    பிளஸ்-2 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மன நல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் பதட்டத்தை தணிக்க எந்தநேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

    கடந்த ஜனவரி மாதம் இந்த உதவி எண்ணில் சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் பயன்பெற்றனர். கடந்த மாதம் சுமார் 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் 14417 உதவி எண்ணில் பேசி மன அழுத்தத்தை நிவர்த்தி செய்தனர்.

    இன்றும் இந்த உதவி எண்ணில் தேவைப்படும் மாணவ-மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வுக்கு பயப்படும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பொதுவாக தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் கடைசி நிமிடத்தில் பதட்டமும் பரபரப்பும் அடைவதுண்டு. அதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக தேர்வுக்கு தேவையானவற்றை வரிசைப்படுத்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுத பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    Next Story
    ×